/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளை நடக்கிறது வேலைவாய்ப்பு முகாம்
/
நாளை நடக்கிறது வேலைவாய்ப்பு முகாம்
ADDED : டிச 12, 2025 06:51 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு ,தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச. 13) காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது.
150க்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ ஐ.டி.ஐ., நர்சிங் படித்தவர்கள் பங்கேற்று தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்று, ஆதார் அட்டை, சுயவிவர குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகல்களுடன் பங்கேற்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் https:/tnprivatejobs.tn.gov.in ல் பதிவு செய்து பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55924 ல் தொடர்பு கொள்ளலாம்.

