ADDED : செப் 26, 2026 04:11 PM
ஒட்டன்சத்திரம், செப்.27-
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பில் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்தது. தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். முதல்வர் தேன்மொழி வரவேற்றார்.
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டுதல் மைய உதவி இயக்குனர் அருண் நேரு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராப்சன் டேவிட், திறன் மேம்பாட்டு அலுவலர் பவித்ரா, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.
முகாமில் 40க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலை நாடுனர்களிடம் நேர்காணல் நடத்தினர். தேர்வான 102 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர்கள் ஆங்கிலத்துறை ஜெனி நிர்மலா, வணிகவியல் துறை கஸ்துாரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
