/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஐ.டி.ஐ.,யில் படித்த அனைவருக்கும் வேலை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
/
ஐ.டி.ஐ.,யில் படித்த அனைவருக்கும் வேலை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
ஐ.டி.ஐ.,யில் படித்த அனைவருக்கும் வேலை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
ஐ.டி.ஐ.,யில் படித்த அனைவருக்கும் வேலை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
ADDED : ஆக 29, 2025 03:28 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி தொழில் பயிற்சி நிலையத்தில் படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
விருப்பாச்சியில் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு தொழில் பயிற்சி நிலைய கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதை தொடர்ந்து விருப்பாச்சி ஐடிஐ யில் குத்துவிளக்கேற்றி வைத்தும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து கண்ணனுார், கே.சி பட்டி வழித்தடத்தில் புதிய பஸ் இயக்கத்தை துவக்க வைத்த அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
இங்கு படித்த அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக அளவு மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர் என்றார்.
எம்.பி., சச்சிதானந்தம், ஐ.டி.ஐ முதல்வர் தீனதயாளன், மண்டல பயிற்சி இன இயக்குனர் மகேஸ்வரன், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ஜெகதீஸ்வரன், கிளை மேலாளர் அசோக், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, பி.டி.ஓ., க்கள் காமராஜ், பிரபு பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ் கலந்து கொண்டனர்.