/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு வரை நீட்டிக்கப்படும் ஆக்கிரமிப்பு கடைகள்; பாதயாத்திரை பக்தர்கள் நடுரோட்டில் பயணிக்கும் அவலம்
/
ரோடு வரை நீட்டிக்கப்படும் ஆக்கிரமிப்பு கடைகள்; பாதயாத்திரை பக்தர்கள் நடுரோட்டில் பயணிக்கும் அவலம்
ரோடு வரை நீட்டிக்கப்படும் ஆக்கிரமிப்பு கடைகள்; பாதயாத்திரை பக்தர்கள் நடுரோட்டில் பயணிக்கும் அவலம்
ரோடு வரை நீட்டிக்கப்படும் ஆக்கிரமிப்பு கடைகள்; பாதயாத்திரை பக்தர்கள் நடுரோட்டில் பயணிக்கும் அவலம்
ADDED : ஜன 29, 2025 05:24 AM

கன்னிவாடி : ரோடு வரை நீட்டிக்கப்படும் ஆக்கிரமிப்பு கடைகளால் நடுரோடு வரை செல்லும் பழநி பாதயாத்திரை பக்தர்கள் விபத்துக்குள்ளாகும் அவலம் நீடிக்கிறது.
பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு மார்கழி முதல் வாரம் முதலே பக்தர்கள் வருகை துவங்கியது. தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற வெளி மாவட்ட பக்தர்கள், மெட்டூர்-மூலச்சத்திரம், ரெட்டியார்சத்திரம்- ஒட்டன்சத்திரம் ரோடுகள் வழியே பாதயாத்திரை செல்கின்றனர்.
பாதயாத்திரை வழித்தடத்தில் நுாற்றுக்கணக்கான ரோட்டோர தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டல், டீக்கடை, உணவு பலகாரம், பழங்கள், இளநீர் விற்பனை என வழி நெடுகிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளன.
தார் ரோட்டின் விளிம்பு வரை கூடாரம் அமைத்து பக்தர்கள் அமர நாற்காலிகளால் ஆக்கிரமித்து உள்ளனர்.பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் தரிசனம் செய்ய பலர் பயணம் துவக்கி உள்ளனர். ரெட்டியார்சத்திரம், செம்பட்டி, கன்னிவாடி வழித்தடங்களில் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.இச்சூழலில் ரோடு வரை நீட்டிக்கப்பட்டுள்ள கடைகளை கடந்து செல்ல, பாதயாத்திரை குழுவினர் நடுரோடு வரை பயன்படுத்துகின்றனர். எதிரெதிரே வாகனங்கள் வரும் நிலையில் ஒதுங்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.
இவற்றை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை, போலீஸ் துறையின் ஒருங்கிணைந்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளால் விபத்து
புதுமைராஜா, பா.ஜ., திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ரெட்டியார்சத்திரம்:பெரும்பாலான இடங்களில் போதிய அகலமின்றி குறுகலாக அமைத்துள்ள நடைபாதை, அதிக பக்தர்கள் வருகை என்பது பயனற்ற சூழலுடன் இடையூறு ஏற்படுத்தும்.
பாதயாத்திரை வழித்தடத்தில் நுாற்றுக்கணக்கான ரோட்டோர தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதயாத்திரை வழித்தடத்தில் விற்பனை பொருட்களை கடை விரிக்கின்றனர். கூடாரம், பக்தர்கள் அமர நாற்காலிகள் என ஆக்கிரமிக்கின்றனர். சீசன் நேரங்களில் பக்தர்கள் நடுரோட்டில் நடப்பதால் விபத்துகள் தொடர்கிறது.
திருடர் தொல்லை
மோகன், பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர், கன்னிவாடி:போதிய போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் பக்தர்கள் ஓய்விடங்களில் அலைபேசி, பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. குறுகிய ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், நடுரோடு வரை செல்லும் பக்தர்களால் விபத்துகள் தொடர்கிறது.
ரோந்து கண்காணிப்பில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
சுகாதாரம் மோசம்
ராமச்சந்திரன், விவசாயி, எல்லைப்பட்டி:இரு மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் வருகை துவங்கியது.
சமீபத்தில் விழா முடிந்தும், கணிசமான அளவில் பக்தர்கள் பாதயாத்திரையை தொடர்கின்றனர். பழநி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள மண்டபங்களில் குடிநீர், கழிப்பறை சுகாதாரம் பராமரிப்பதில்லை. அசுத்தம் துர்நாற்ற சூழலில் பக்தர்கள் ஓய்வெடுத்தல், உணவு உண்ணும் அவலநிலை தொடர்கிறது.தன்னார்வலர்கள் மூலம் சுகாதாரம் காக்க நடவடிக்கை வேண்டும். செம்மடைப்பட்டி தடத்தில் ரோடு விரிவாக்க பணி, அதிகாரிகள் அலட்சியத்தால் ஆமை வேகத்தில் நடக்கிறது.சில இடங்களில் பாதயாத்திரை நடைபாதை சரிவர சீரமைக்காமல், வெள்ளை வர்ணம் பூசி மறைத்துள்ளனர்.இரவு நேரங்களில் பலர் இப்பகுதியை கடந்து செல்லும் போது பாதிக்கின்றனர்.

