/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பு, நாய்த்தொல்லை: பழநி 10வது வார்டு மக்கள் அவதி
/
ஆக்கிரமிப்பு, நாய்த்தொல்லை: பழநி 10வது வார்டு மக்கள் அவதி
ஆக்கிரமிப்பு, நாய்த்தொல்லை: பழநி 10வது வார்டு மக்கள் அவதி
ஆக்கிரமிப்பு, நாய்த்தொல்லை: பழநி 10வது வார்டு மக்கள் அவதி
ADDED : ஆக 14, 2025 02:46 AM

பழநி,: ஆக்கிரமிப்பு, நாய் தொல்லையால் பழநி நகராட்சி 10 வது வார்டு மக்கள் அவதிப் படுகின்றனர்.
நரசிம்மன் சந்து, தோட்டக்கார தெரு ,கிழக்கு தோட்டக்கார தெரு, வடக்கு தோட்டக்கார தெரு, சித்தநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு குறுகிய சந்துகளை கொண்டுள்ளது.
வார்டு பகுதிக்கு செல்லும் ரோடுகளில் செயல்படாத தண்ணீர் தொட்டி,ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோந்து பணியை தீவிரபடுத்துங்க பிரகாஷ், பழைய இரும்பு வியாபாரி, நரசிம்மன் சந்து: நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. முதியவர்கள், குழந்தைகள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தெருவில் நாய்கள் துரத்துவதால் குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகின்றனர் .வார்டு பகுதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீசாரும் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
பக்தர்களுக்கு சிரமம் ராஜா, டெய்லர்,தேரடி: பாதாள சாக்கடை திட்டத்தை வார்டுக்குள் விரைவில் கொண்டு வர வேண்டும். எங்கள் பகுதியில் நுழைவுப் பகுதியில் பயன்பாடு இல்லாத தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ராமர் கோயில் எதிரே ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
கேமரா பொருத்தப்படும் சண்முகப்பிரியா, கவுன்சிலர், (தி.மு.க.,): வார்டில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் துவங்க உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கொசு மருந்து அடிக்கப்படுகிறது. குப்பை அகற்ற போதுமான பணியாளர்கள் நகராட்சியில் இல்லை. இருப்பினும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கண்காணிப்பு கேமரா பொருத்த நகராட்சி ,போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும். ரோந்து பணி குறித்து போலீசாருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்றார்.