/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பு; டி.எஸ்.பி., எச்சரிக்கை
/
ஆக்கிரமிப்பு; டி.எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : நவ 30, 2024 05:41 AM
பழநி; ''பழநி கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் பழநி அடிவாரம் பகுதியில் அனுமதியின்றி தற்காலிக கடைகளை அமைக்க இடைத் தரகர்கள் பொய்யான வாக்குறுதி அளித்தால் தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ,''என டி.எஸ்.பி., தனஞ்செயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழநி நகரில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் ஆக்கிரமிப்பு, தற்காலிக கடைகள் உருவாகி வருகின்றன. சிலர் பணம் பறிக்கும் நோக்குடன் போலீஸ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி கடைகள் அமைப்பதாக தகவல் பரவியது.
இதை தொடர்ந்து டி.எஸ்.பி., தனஞ்செயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழநி அடிவாரப் பகுதிகளில் நிரந்தர, தற்காலிக சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இக்கடைகள் அகற்றப்படுவதை பயன்படுத்தி போலீசாருக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள், பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் ஆகியோர் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி மீண்டும் கடைகள் வைக்க அனுமதி பெற்றுத் தருவதாக கூறினால் அதனை நம்ப வேண்டாம். இதுபோன்று நபர்களை குறித்து அலைபேசி எண்கள் 98847 41609, 98947 96690 ல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

