/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கிரி வீதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
/
பழநி கிரி வீதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ADDED : டிச 12, 2024 06:09 AM

பழநி: உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பழநி கிரிவீதியில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு முளைப்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பழநி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகின. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் அவை அகற்றப்பட்டன. வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை தடுக்க கிரி விதியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கிரி வீதிக்கு அருகே உள்ள கடைகளுக்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் நிரந்தர கடைக்காரர்கள் சிரமப்பட்டனர். ஆனால் பாத விநாயகர் கோயில் முன்பு தட்டு கடை வியாபாரிகள், வட மாநில வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கிரி வீதியில் தரைக் கடைகளை ஏற்படுத்தி மீண்டும் ஆக்கிரமித்து வருகின்றனர். பக்தர்களிடம் பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் நோக்கம் முழுமையாக நிறைவேறி உள்ள நிலையில் சிறு தரைகடைகளை கோயில் நிர்வாகம், போலீசார் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கண்டுகொள்ளாமல் விட்டால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கும் என பக்தர்கள் கூறினர்.