/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
சின்னாளபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : டிச 21, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற பணி நடந்தது.
திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் சின்னாளபட்டி விலக்கு சந்திப்பு முதல் பஸ் ஸ்டாண்ட், பேங்க் ரோடு பகுதிகளில் ரோடு விரிவாக்கம் நடந்தது.
ரோட்டோர கடைகள் முன்பு டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடப்பட்டு நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் நேற்று அகற்றம்பணி நடந்தது. நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, உதவி பொறியாளர் பரத் முன்னிலையில் தற்காலிக கடைகள், கூடுதல் கட்டடங்கள் அகற்றப்பட்டன.

