ADDED : ஜூலை 24, 2025 04:51 AM

வடமதுரை : 'தினமலர் 'செய்தி எதிரொலியாக அய்யலுார் கோடாங்கிசின்னான்பட்டியில் போக்குவரத்துக்கு சிரமத்தை தந்த பகுதியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
தென்னம்பட்டி துவங்கி பிலாத்து, ஜி.குரும்பபட்டி, மூக்கரபிள்ளையார்கோயில், கோடாங்கிசின்னான்பட்டி, கஸ்பா அய்யலுார் வழியே பஞ்சந்தாங்கியை இணைக்கும் முக்கிய குறைந்த துார ரோடு செல்கிறது.
இந்த ரோடு அய்யலுார் கோடாங்கிசின்னான்பட்டியில் வெளிப்புற ரோடு போல இங்குள்ள திறந்த வெளி கலையரங்கத்தின் பின்பகுதியில் செல்கிறது. மற்ற பகுதிகளில் ரோடு அமைந்திருக்கும் நிலையில் இப்பகுதியில் குறைந்த துாரம் மட்டும் மண் ரோடாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு அதிக சிரமத்தை தந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் பேவர் பிளாக் ரோடு அமைத்துள்ளனர்.