/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொறியாளர்கள் சங்க கிரிக்கெட்: திண்டுக்கல் அணி வெற்றி
/
பொறியாளர்கள் சங்க கிரிக்கெட்: திண்டுக்கல் அணி வெற்றி
பொறியாளர்கள் சங்க கிரிக்கெட்: திண்டுக்கல் அணி வெற்றி
பொறியாளர்கள் சங்க கிரிக்கெட்: திண்டுக்கல் அணி வெற்றி
ADDED : மார் 03, 2024 06:34 AM

திண்டுக்கல்: இந்தியா சிமென்ட்ஸ் ப்ரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் கட்டட பொறியாளர்கள் சங்கம், திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
தமிழ்நாடு , புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர் சங்க கூட்டமைப்பு சார்பாக இந்தியா சிமென்ட்ஸ் ப்ரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் கட்டட பொறியாளர்கள் சங்க திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிவாகை சூடி சாம்பியன் பட்டம் பெற்றது. மாநில அளவில் பொறியாளர் சங்கங்களுக்கிடையே 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 60 சங்கங்களுக்கிடையே பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையே சென்னை கேளம்பாக்கத்தில் காலிறுதி, அரையிறுதி ,இறுதிப் போட்டிகள் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணியானது காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது.
முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய காரைக்குடி அணி 12 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர் நாயகனாக சரவணன், இறுதிப் போட்டி ஆட்டநாயகனாக கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் வாசுதேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி கேப்டன் அமல் சதீஷிடம் கோப்பையை வழங்கினார். தமிழ்நாடு , புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ், செயலாளர் காந்தி, பொருளாளர் ராமகிருஷ்ணன், மாநில பொறுப்பாளர்கள் , இந்தியா சிமென்ட்ஸ் பொறுப்பாளர்கள் வாழ்த்தினர்.

