/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 01, 2026 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். முதல்வர் தேன்மொழி வரவேற்றார். ஆராய்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா, என்.எஸ்.வி.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிறைமதி பேசினர். உதவி பேராசிரியர் ஜெனி நிர்மலா நன்றி கூறினார். வணிகவியல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி, கணிதத்துறை தலைவர் நந்தினி ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

