ADDED : ஜன 01, 2026 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், தமிழக சுகாதார இன்ஸ்பெக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் நடந்தது.
மாநிலத்தலைவர் மணிவண்ணன்தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட சுகாதார அலுவலரின் பணியாளர் விரோத போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுகாதார இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் முன்னிலையில் அடிப்பதற்கு கை ஓங்கியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. இதில் நிர்வாகிகள் பூமிராஜன், சந்திரசேகர், முனியப்பன் கலந்துகொண்டனர்.

