/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
100 சதவீதம் தேர்ச்சி உறுதிசெய்யுங்க; கலெக்டர்
/
100 சதவீதம் தேர்ச்சி உறுதிசெய்யுங்க; கலெக்டர்
ADDED : நவ 28, 2024 06:13 AM
திண்டுக்கல்: ''மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி உறுதி செய்யப்பட வேண்டும்'' என கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.
பள்ளிகல்வித்துறை சார்பில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் தலைமை வகித்த அவர்
பேசியதாவது : வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் ,இதுவரை இடிக்கப்பட்டவை தொடர்பாக வாராந்திர அறிக்கை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பிக்க வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விவரங்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 10,11,12 ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பள்ளி வாரியாக , பாட வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், சமூகநல அலுவலர்புஷ்பகலா கலந்து கொண்டனர்.