/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரிக்குறைப்பின் முழுப்பயன் மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்க! ஜி.எஸ்.டி.,குறைப்புக்கு பின்னும் விலை குறையாத பொருட்கள்

ADDED : அக் 19, 2025 10:11 PM

நாட்டில் பொருளா தாரப்புரட்சி ஏற்படுத்தும் பொருட்டு 'ஜி.எஸ்.டி., 2.0' பெயரில் பால், பால் உற்பத்தி பொருட்கள், அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், கார், அலைபேசி உள்பட பல்வேறு வீட்டுஉபயோக பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டது. இதனால் பொருட்கள் விலைகுறையும், வரிக்குறைப்பின் பயனை மக்கள் அனுபவிக்க முடியும் என அரசு அறிவித்தது.
Pஆனால், ஜி.எஸ்.டி., வரி குறைப்புக்கு பின்னும் பல இடங்களில் பொருட்கள் விலை குறையவில்லை. பலசரக்குக்கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் பழைய விலையிலேயே மளிகைப்பொருட்கள் விற்கப்படுகிறது. தீபாவளி சமயம் என்பதால், ஸ்வீட், மளிகை, நெய், எண்ணெய், வெடி, புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தேவை மக்களுக்கு ஏற்பட்டிருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் வரிக்குறைப்பின் முழுப்பயன் மக்களை சென்றடையவில்லை.
மேலும், சில கடைகளில் பொருட்களின் விலையை குறைக்காமல் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருட்களின் அளவினை அதிகரித்து அதே விலைக்கு விற்கின்றனர். அரசின் வரிக்குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கிறதா என்பதை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், அதுகுறித்த தகவலே தெரியாத அளவிற்குத்தான் இங்குள்ளவர்களின் செயல்பாடுகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
கார், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், கேட்ஜெட்கள் போன்ற பெரிய பொருட்களின் விலை மாற்றத்தை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், பலகோடி நுகர்வோர்கள் பயனளிக்கும் வகையில் சில்லரை விற்பனை மளிகை பொருட்களின் விலையில் மாற்றம் செய்யவில்லை என்பதே குற்றச்சாட்டு. இது மக்கள் நலனுக்கான அரசின் நோக்கத்தை சிதைப்பதோடு, நுகர்வோர் சுரண்டலுக்கான வழியையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு ெய்து ஜி.எஸ்.டி., பயன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.