/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் கண்காட்சி நடத்த எதிர்பார்ப்பு தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர்...
/
சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் கண்காட்சி நடத்த எதிர்பார்ப்பு தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர்...
சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் கண்காட்சி நடத்த எதிர்பார்ப்பு தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர்...
சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் கண்காட்சி நடத்த எதிர்பார்ப்பு தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர்...
UPDATED : பிப் 01, 2026 06:47 AM
ADDED : பிப் 01, 2026 06:13 AM

திண்டுக்கல்: ''திண்டுக்கல்லில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், புதிய ஸ்டார்ட்அப் தொழில்கள் குறித்த விழிப்புணர்வுக்காக தொழில் முதலீட்டு கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, தொழில் முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனத்தினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கல்வி, உட்கட்டமைப்பு, தொழில்கள், தனிநபர் வருவாய் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மாவட்டத்தின் வளர்ச்சிஅளவிடப்படுகிறது. அவ்வகையில் மாணவர்களின் கல்வி அறிவை பெருக்கவும், புதிய சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை செய்கிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டவும், ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ., தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள், கண்டுபிடிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து அறியவும், மாவட்ட நிர்வாகமும் நாகராஜன் அறிவியல் அறக்கட்டளையும் இணைந்த முயற்சியில் அறிவியல், புத்தாக்கக் கண்காட்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
இதுதவிர மாவட்டத்தில் தென்னை நார் சார்ந்த தொழிற்சாலைகள் ஏராளம் உள்ளன. அதுபோல 'சிட்கோ', 'சிப்காட்'டிலும் பிளாஸ்டிக், இரும்பு, எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங், உணவு சார்ந்த ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தவும், தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தவும் அரசுத் திட்ட வழிகாட்டுதல்படி, மாவட்ட தொழில் மையம் நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் போதுமான விழிப்புணர்வு, வழிகாட்டுதல்கள் இல்லாததால் புதிதாக தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள், சுய உதவிக்குழுவினர் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சரியான பாதையை அமைத்து கொடுத்திட மாவட்ட நிர்வாகம் உள்மாவட்ட அளவில் தொழில் முதலீடு, ஸ்டார்ட் அப் நிறுவன கண்காட்சி நடத்த வேண்டும். இதன் மூலம், தனிப்பட்ட மனிதர்களின் சாதனைக்கு, மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருப்பதுடன் வளர்ச்சியும் உறுதிசெய்யப்படும். இந்நிலையில் மாவட்டத்தின் உறுதியான வளர்ச்சி, வருவாய் அதிகரிக்க தொழில் முதலீட்டு கண்காட்சி நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.---------

