ADDED : அக் 07, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஜி.டி.என்.,கல்லுாரியின் சுற்றுச் சூழல் கழகம் சார்பில் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் இளைஞர் செயல்பாடு,பருவநிலை மாற்றம் என்ற தலைப்பில் நடந்தது.
கல்லுாரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழக அரசின் பசுமை காப்பாளர் விருது பெற்ற அசோக்குமார் பேசினார். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சுற்றுச் சூழல் கழகத்தின் சார்பாக பனை விதைகள், விதைப்பந்துகள் வழங்கப்பட்டது. பொருளியல் துறை உதவிப்பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.

