நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தையன்கோட்டை,: சங்காரெட்டிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமைக்குறள் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரா தலைமை வகித்தார். ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். தன்னார்வலர்கள் முனிராம், சதீஷ் முன்னிலை வகித்தனர். நீர்நிலைகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், கல்வி புரவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், மஞ்சப்பை, மரக்கன்று வழங்கப்பட்டது. தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமு பேசினார். ஏற்பாடுகளை ஆசிரியர் புஷ்பாஜோஸ்பின் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

