/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையிலும் விலை உயர்ந்த எலுமிச்சை * கிலோ ரூ.80 ஆக உயர்வு
/
மழையிலும் விலை உயர்ந்த எலுமிச்சை * கிலோ ரூ.80 ஆக உயர்வு
மழையிலும் விலை உயர்ந்த எலுமிச்சை * கிலோ ரூ.80 ஆக உயர்வு
மழையிலும் விலை உயர்ந்த எலுமிச்சை * கிலோ ரூ.80 ஆக உயர்வு
ADDED : நவ 08, 2024 04:39 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் மழை காலத்திலும் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் கிலோ ரூ.50 க்கு விற்ற நிலையில் நேற்று ரூ. 80 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களில் எலுமிச்சை அதிகம் விளைவிக்கப்படுகிறது. சில நாட்களாக வரத்து அதிகரிக்க கிலோ எலுமிச்சை ரூ.50 க்கு விற்பனையானது. அதற்கு முன்பு கிலோ ரூ.100 வரை விற்றது. இந்நிலையில் முகூர்த்தம், கந்த சஷ்டி விழா காரணமாக எலுமிச்சை விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.80 க்கு விற்பனையானது. எலுமிச்சை விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயி மணிகண்டன் கூறுகையில், ''முகூர்த்தம் காரணமாக சரிந்திருந்த எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது,'' என்றார்.