/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
4597 ஏக்கர் பண்ணைகள் மூலம் 3598 மெட்ரிக் டன் விதைகளுக்கு சான்று
/
4597 ஏக்கர் பண்ணைகள் மூலம் 3598 மெட்ரிக் டன் விதைகளுக்கு சான்று
4597 ஏக்கர் பண்ணைகள் மூலம் 3598 மெட்ரிக் டன் விதைகளுக்கு சான்று
4597 ஏக்கர் பண்ணைகள் மூலம் 3598 மெட்ரிக் டன் விதைகளுக்கு சான்று
ADDED : அக் 29, 2024 05:50 AM

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் 4597 ஏக்கர் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு 3598 மெட்ரிக் டன் விதைகள் சான்று செய்யப்பட்டுள்ளதாக'' விதைச் சான்றளிப்பு உயிர்ம சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.
l விவசாயிகளுக்கு துறையின் பங்களிப்பு
சான்று பெற்ற விதைகளை தங்கு தடையின்றி உரிய பருவ காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வைப்பதோடு தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் விநியோகம் செய்வதுதான் முதல் பணி. விவசாயிகள் தரமான விதைகளை பயிரிடுவதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.விவசாயிகளுக்கு நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள் சென்றடைவதை உறுதி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்கிறோம். உயிர்ம சான்றளிப்பின் மூலம் இயற்கை விவசாயம் வழியே மண்ணுயிர் காப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
l விதைப் பண்ணைகளால் பலன்...
தரமான விதைகளை உற்பத்தி செய்ய அந்தந்த வட்டார வேளாண் உதவி அலுவலர்கள் மேற்பார்வை செய்கின்றனர்.விதைப்பண்ணையை விவசாயிகளின் நிலங்களிலோ, அரசாங்க பண்ணைகளிலோ அமைக்கலாம். மாவட்டத்தில்விவசாயிகளின் நிலங்களில் விதை உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி ஆதார விதைகள் விவசாயிகளுக்குகொடுக்கப்பட்டு சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு உற்பத்தி மானியம் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.
l புதிய விதை உற்பத்தியாளர்களை உருவாக்க யோசனைகள்.
அரசு, தனியார் விதை உற்பத்தியாளர்கள் என இரு வகையில் உள்ளனர். அரசு விதை உற்பத்தியாளர்களை அதிகரிக்கவேண்டுமென்பதே நோக்கம். குறிப்பாக மகளிர் உதவிக்குழுவினரே ஒன்று சேர்ந்து உற்பத்தி நிறுவனமாக மாறிவிதைப்பண்ணை அமைக்கலாம். விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும். அவர்களை ஊக்குவிக்க விதை சுத்திகரிப்புநிலையங்களில் முன்னுரிமை அளிப்பதோடு விதைப்பண்ணைகள் அமைக்க அனைத்து பயிற்சிகளும் அரசு அளிக்கிறது. இப்படிஉற்பத்தியாளர்களாக மாறும்போது சான்று பெற்ற விதைகளின் பயன்பாடு அதிகரித்து விவசாயம் பெருகும்.
l சான்று பெற்ற விதைகளின் பயன்பாடு
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால் கூடுதல் மகசூல் கிடைக்கும். சரியான முளைப்பு திறன், பூச்சி நோய் தாக்குதல்இல்லா விதைகள், சீரான வளர்ச்சி, விளைச்சல், ஒரே நேரத்தில் அறுவடை போன்ற பலன்கள் கிடைக்கின்றன. அதேநேரத்தில் பல விவசாயிகள் ஒரே ரகமாக தேர்வு செய்து நடும்போது ஒரே நேரத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்குசான்று பெற்ற விதைகள் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த விதைகளை அந்தந்த வட்டாரங்களில் உள்ள விற்பனைகிடங்கில் பெற்றுக்கொள்ளலாம். விதைகளும் மானிய விலையிலே வழங்கப்படுகிறது.
l சான்று செய்யப்பட்ட விதைகள்...
மாவட்டத்தில் 2023ல் 4597 ஏக்கர் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டதில் 3000 மெட்ரிக் டன் இலக்குநிர்ணயிக்கப்பட்டு 3598 மெட்ரிக் டன் விதைகள் சான்று செய்யப்பட்டுள்ளது.
l உயிர்ம சான்றளிப்புத்துறை மூலம் கிடைக்கும் பயன்
விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் பூச்சிக்கொல்லி, கலைக்கொல்லி போன்ற மருந்துகள், ரசயான உரங்களின்பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்ய வேண்டும். மண்ணையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தால் பயிரும், மனிதனும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இயற்கை விவசாயப் பொருட்களின் மூலமாக கூடுதல் லாபம் பெற முடியும். அதேநேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் கூடுதல் லாபம் பெற முடியும்.இதற்காக பல்வேறு பயிற்சிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
l பூச்சுக்கொல்லி, கலைக்கொல்லி மருந்து பயன்படுத்துகிறார்களே...
இதுபோன்ற மருந்துகளை பயன்படுத்துவதால் பெறப்படும் விளைபொருட்கள் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.இதனை தவிர்த்து இயற்கை விவசாயித்திற்கு மாற வேண்டும். பசுந்தாள், தழை உரங்கள், மாட்டு சாணம்,தொழு உரங்கள் போன்றவற்றை பயன்டுத்தும் போது உற்பத்தி செலவு குறைவதோடு, மண் மக்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க முடியும் என்றார்.