/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழகத்தில் விரோத ஆட்சி நடக்கிறது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு
/
தமிழகத்தில் விரோத ஆட்சி நடக்கிறது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் விரோத ஆட்சி நடக்கிறது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் விரோத ஆட்சி நடக்கிறது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு
ADDED : பிப் 04, 2024 04:08 AM
சின்னாளபட்டி : ''தமிழகத்தில் வெகுஜன விரோத ஆட்சி நடப்பதாக,'' முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
ஆத்துார் தொகுதி அ.தி.மு.க., சார்பில் வக்கம்பட்டியில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற தத்துவத்தை வாழ்ந்து காட்டியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அதே வழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் நல்லாட்சி நடத்தி மறைந்தாலும் மக்கள் மனங்களில் வாழ்கின்றனர்.
இவர்களை பின்பற்றி பழனிசாமியின் நான்கரை ஆண்டு ஆட்சியில் ஏழைகளுக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
வெகுஜன விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. மகளிர் காதிலும் இந்த அரசு பூ சுற்றி விட்டது. மக்களை ஏமாற்றியது இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்பது அடுத்த தேர்தலில் தெரியும் என்றார்.
ஒன்றிய செயலாளர்கள் ஆர்.கே.சுப்பிரமணி, ஆரோக்கியசாமி, சின்னச்சாமி, அவைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், மாவட்டத் துணைச் செயலாளர் விஜய பாலமுருகன், வர்த்தக அணி செயலாளர் பாலு, மகளிர் அணி இணை செயலாளர் ஆனிசோபி மெடில்டா, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அருளானந்தம், மாணவரணி செயலாளர் கோபி, வக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பேட்ரிக்பிரேம்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் வெண்ணிலா அருள், விஜயலட்சுமி சந்தானகிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர்கள் அகரம் சக்திவேல், தாடிக்கொம்பு முத்தையா பங்கேற்றனர்.