/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்திலிருந்து பனை தொழிலாளர்களுக்கு விலக்கு நலவாரிய தலைவர் வலியுறுத்தல்

ADDED : பிப் 09, 2025 01:25 AM
திண்டுக்கல்:''கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில் இருந்து பனை தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.
தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் திண்டுக்கல்லில் நடந்த பனை தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது :
நலவாரியத்தில் 15 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் பதநீரை இறக்கி விற்பனை செய்வதோடு கருப்பட்டி தயாரிக்கின்றனர். மீதமுள்ள பதநீர் புளித்து கள்ளாக மாறிவிடுகிறது.
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில் பனை தொழிலாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
விருதுநகரில் 15 பேர் சிறையில் இருக்கின்றனர். அந்த தடுப்பு சட்டத்தில் இருந்து பனை தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம்.இதற்காக மாவட்டந்தோறும் தொழிலாளர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறேன். 2024ல் 14 மாவட்டங்களில் ஒருகோடி பனை விதைகள் நடவுசெய்தோம். பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள் இறக்க அனுமதி கொடுத்தால் வரவேற்போம் என்றார்.