ADDED : ஜூன் 24, 2026 01:48 AM
அ நிறம் | அளவு
பழநி: திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் பழநி சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தில் ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும். அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
