ADDED : ஜூன் 30, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநிலத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் கடந்த கால சங்க செயல்பாடுகள், முயற்சிகள், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து பேசினார். மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின், செயலாளர் சுகந்தி ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
திருப்பத்துார், அரியலுார் மாவட்டங்களை தவிர 36 மாவட்டங்களை சேர்ந்த மத்திய செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வார இறுதி நாட்களில் ஆய்வுக்கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.
