UPDATED : செப் 03, 2026 04:30 PM
ADDED : செப் 03, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம் பழநி ரோடு தனியார் ஓட்டலில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் மாரிமுத்து, ஹிந்து வியாபாரிகள் சங்க கோட்டச் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது, ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், அன்னதானம் வழங்குவது, சிறுபான்மையினருக்கு வழங்குவது போல் ஹிந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்க அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
