/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை உயர்ந்த கோவைக்காய், சவ்சவ்
/
விலை உயர்ந்த கோவைக்காய், சவ்சவ்
ADDED : டிச 13, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கோவைக்காய் கிலோ ரூ.5, சவ்சவ் ரூ.4 அதிகரித்து விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் சுற்றிய பகுதிகளில் கோவைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களாக அறுவடை பணி நடந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது.
இதனால் விலை குறைந்து வரிக்கோவைக்காய் ரூ.27, நாட்டு கோவைக்காய் ரூ.35க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்ததால் வரிக்கோவைக்காய் கிலோ ரூ.33ம், நாட்டு கோவைக்காய் ரூ.40க்கு விற்பனையானது.
சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.14க்கு விற்ற சவ்சவ் ரூ.18க்கு விற்பனை ஆனது.