/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீபாவளி முடிந்தும் தொடரும் வெடி விபத்து
/
தீபாவளி முடிந்தும் தொடரும் வெடி விபத்து
ADDED : நவ 07, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் பாத்திமா நகரை சேர்ந்த 11 வயது மாணவர் வீட்டில் புஸ்வானம் வெடித்து கொண்டிருந்த போது வெடித்ததில் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
*இதேபோல் ஜி.நடுப்பட்டியை சேர்ந்த 13 வயது மாணவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பு வெடியை பற்ற வைத்துவிட்டு சிறிது நேரம் காத்திருந்தார். வெடி வெடிக்க வில்லை என நினைத்து கையில் எடுத்துள்ளார். அப்போது வெடி வெடித்ததில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது .வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.