/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 6வது முறையாக காவல் நீட்டிப்பு
/
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 6வது முறையாக காவல் நீட்டிப்பு
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 6வது முறையாக காவல் நீட்டிப்பு
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 6வது முறையாக காவல் நீட்டிப்பு
ADDED : பிப் 22, 2024 03:07 AM
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு 6வது முறையாக காவலை நீட்டிப்பு செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக 2023 டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அங்கித்திவாரி கைதானார். 5வது முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் மனுவும் 2 முறை தள்ளுபடியானது. நேற்றுடன் அங்கித்திவாரிக்கு காவல் தேதி முடிந்தது.
வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று மதியம் 3:00 மணிக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித்திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். மார்ச் 6 வரை காவலை நீட்டித்து நீதித்துறை நடுவர் மோகனா உத்தரவிட்டார். 6வது முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.