/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு நீடிப்பு
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு நீடிப்பு
ADDED : மே 19, 2025 04:47 AM
வடமதுரை : பேரூராட்சி பகுதியில் வடிகால் கட்டமைப்பு சீரமைப்பு பணிகளுக்காக இடையூரான ஆக்கிரமிப்புகளை அவரவராகவே அகற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வடமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் தலைவர் ஜெயவேல் தலைமையில் மே 1ல் நடந்தது. பேரூராட்சி சார்பில் கவுன்சிலர் கணேசன் பங்கேற்றார். இதில் பேரூராட்சி பகுதியில் வடிகால் கட்டமைப்பு சீரமைப்பு பணி துவங்க உள்ளதால், மக்களுக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை மே 16க்குள் அகற்றி கொள்வது, இறைச்சி கடைகளை டெலிபோன் எக்சேஞ்ச் பகுதியில் இருக்கும் காலி இடத்திற்கு இடம் மாற்றுவது, வியாபாரிகள் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு ஏதும் அவரவராகவே அகற்றவில்லை. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைவீதிகளில் செய்யப்பட்ட ஒலிப்பெருக்கி அறிவிப்பில் 'வியாபாரிகள் சங்கத்தினருடன் நடந்த ஆலோசனை கூட்டம், ஆக்கிரமிப்பு அகற்ற செய்யப்பட்ட குறியீடு விபரங்களை தெரிவித்து மே 25க்குள் அவரவராக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.