/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் மின்பாதை விரிவாக்க பணி
/
வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் மின்பாதை விரிவாக்க பணி
ADDED : ஜன 15, 2024 04:26 AM

வடமதுரை : வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் மின்பாதை விரிவாக்க பணிகள் நடக்கிறது.
திண்டுக்கல் திருச்சி இடையே இருவழிப்பாதை திட்ட பணி துவங்கியபோது வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இரு பாதைகள் மட்டும் இருக்கும் ரயில் நிறுத்தமாக தரம் குறைக்கும் வகையில் இருந்தது. மக்களின் தொடர் முயற்சியால் துணை பாதைகளுடன் ரயில்வே ஸ்டேஷனாக தொடர அனுமதி கிடைத்தது. 2ம் கட்டமாக சேர்க்கப்பட்டதால் இங்குள்ள துணை பாதைகள் மின்மயமாக்கப்படாமல் இருந்தது. இதனால் டீசல் இன்ஜின்கள் மட்டும் அந்த பாதைக்குள் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
மின்சார இன்ஜின்களே முழுக்கவே பயன்பாட்டில் இருக்கும் நிலை ஏற்பட உள்ளதால் தற்போது வடமதுரையில் துணை பாதைகளில் மின்மயமாக்கல் பணி நடக்கிறது.