ADDED : ஆக 15, 2026 07:31 PM
திண்டுக்கல், ஆக.16-
சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் மக்கான் தெரு காந்திஜி நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். கண் பார்வை குறைபாடு, கண்புரை, கண் நீர் அழுத்தம் உள்பட பல்வேறு குறைபாடுகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கிளைத்தலைவர் சம்சுதீன், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் பிலால் உசேன், நிர்வாகி சர்தார் சேட் பங்கேற்றனர்.
இதுபோல் திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம், சேவாப்பூர் இன்ப சேவா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கடவூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தின. சங்க முன்னோடி குழந்தைவேல் துவங்கி வைத்தார். 112 பேர் மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர். 43 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். லயன்ஸ் சங்கத் தலைவர் கஷ்மீர் அருண், மோகன் பங்கேற்றனர்.
