ADDED : ஆக 15, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஆக.16-
வடமதுரை கோட்டை முனியாண்டி கோயில் ஆண்டுத் திருவிழா நேற்று துவங்கியது.
பக்தர்கள் தேரோடு வீதிகள் வழியே பால் குடங்களுடன் ஊர்வலமாக வடமதுரையை சுற்றி வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி ரத ஊர்வலம் நடந்தது. இன்று(ஆக.,16) பொங்கல் வைத்து வழிபாட்டிற்கு பின்னர் ஆட்டு கிடாய்களை வெட்டி பொது விருந்து, இரவு நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை தக்கார் முத்துலட்சுமி, விழாக்குழுவினர், பவுர்ணமி பூஜை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.
