/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்ட வங்கிகளில் போலி கணக்குகள் அதிகரிப்பு; அப்பாவிகள் பெயரில் சட்டவிரோத பண பரிமாற்றம்
/
திண்டுக்கல் மாவட்ட வங்கிகளில் போலி கணக்குகள் அதிகரிப்பு; அப்பாவிகள் பெயரில் சட்டவிரோத பண பரிமாற்றம்
திண்டுக்கல் மாவட்ட வங்கிகளில் போலி கணக்குகள் அதிகரிப்பு; அப்பாவிகள் பெயரில் சட்டவிரோத பண பரிமாற்றம்
திண்டுக்கல் மாவட்ட வங்கிகளில் போலி கணக்குகள் அதிகரிப்பு; அப்பாவிகள் பெயரில் சட்டவிரோத பண பரிமாற்றம்
ADDED : பிப் 17, 2026 06:42 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதால் வணிகர்கள், அப்பாவிகள் பாதிப்பு அடைகின்றனர். இதை தொடர்ந்து வங்கிகள் கண்காணிப்பை தீவிரப் படுத்துவதால் போலிக் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாவட்டத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் பல செயல்பட்டு வருகின்றன. இதில் உருவாக்கும் போலி கணக்குகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர். தற்போது வங்கி கணக்கு வாடிக்கையாளர் டிஜிட்டல் ( யு.பி.ஐ. பேமென்ட், நெட் பேங்கிங் போன்ற) பண பரிவர்த்தனைக்கு பெரும்பாலும் அலைபேசி எண்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் மாணவர்கள், அப்பாவி பொதுமக்கள் வங்கி கணக்குகளை சில ஆயிரங்கள் ரூபாய்களை பெற்றுக் கொண்டு வேறு ஒரு அடையாளம் தெரியாத நபருடைய அலைபேசி எண்ணை வங்கிக் கணக்கில் மாற்றி விடுகின்றனர்.
இந்த வங்கி கணக்குகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருளாதார விதிமுறைகளை மீறி பணவர்த்தனை நடைபெறுகிறது. வங்கி நடவடிக்கை எடுக்கும் போது அந்த வங்கி கணக்குகளை வேறு நபர்களுக்கு வழங்கிய பொதுமக்கள் வேறு வங்கிக் கணக்கோ, வங்கி மூலம் பெறக்கூடிய பயன்களை அடைய முடிவதில்லை.
தற்போது வங்கி கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதால் அளவுக்கு அதிகமான பண பரிவர்த்தனை, சட்டத்திற்கு புறம்பான பண பரிவர்த்தனை கண்டறியப்படுகின்றன. அதன்படி போலி வங்கி கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்க பணப்பரிவர்த்தனகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
,,,,,,,,,,,
நடவடிக்கை வேண்டும்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வங்கி சேவைகள் எளிமையாகக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கியில் பணம் பரிமாற்றம் செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் டிஜிட்டல் முறையில் அலைபேசியில் பணத்தை பெற்றுக் கொள்ள அனுப்ப எளிதாக உள்ளது. தொழில்நுட்பம் வளர அதில் ஏமாற்றுபவர்களும் புதிதாக உருவாகி வருகின்றனர். வணிகர்கள் மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால் வணிகர்கள் சட்டரீதியாக முறையாக ஒவ்வொரு விற்பனைக்கும் ரசீது வழங்கி விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் முறையான ஆவணங்களை கையாள வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள் இடம் அதிக தொகை பரிவர்த்தனையில் ஈடுபடும்போது அவர்களது முறையான அடையாளங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் இழந்த பணத்தை மீட்கவும் சட்ட ரீதியான சிக்கல்களில் இருந்து சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்கவும் இயலும். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு போலி வங்கி கணக்குகள் உருவாவதை தவிர்க்க நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன், செயலாளர், சேம்பர் ஆப் காமர்ஸ், பழநி.

