ADDED : பிப் 17, 2026 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் சக்கையநாயக்கனுாரை சேர்ந்தவர் விவசாயி பாண்டி 70. மனைவி மீனாட்சி 65. இவர்களது மகன் சுருளி 45. சொத்து கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுருளி, பெற்றோரை அரிவாளால் வெட்டினார்.
அரசு மருத்துவமனையில் இரு வரும் சேர்க்கப்பட்ட நிலையில் பாண்டி இறந்தார். அம்மையநாயக்கனுார் போலீசார் சுருளியை கைது செய்தனர்.

