
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை பாதியாக குறைந்து கிலோ ரூ.20 க்கு விற்றது.
ஒட்டன்சத்திரம் , மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார், கோம்பைபட்டி, பெத்தேல்புரம் சுற்றிய கிராம பகுதிகளில் பீன்ஸ் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. வரத்து குறைவாக இருந்ததால் கிலோ ரூ.40 க்கு விற்பனையானது. தற்போது பல இடங்களில் அறுவடை மும்முரம் அடைந்துள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இதன் விலை ரூ.40லிருந்து பாதியாக குறைந்து ரூ.20க்கு விற்பனையானது.
வியாபாரி ஒருவர் கூறுகையில்,வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் பீன்ஸ் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.