/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீருதிம்மம்மன் கோயிலில் குடும்ப விழா
/
வீருதிம்மம்மன் கோயிலில் குடும்ப விழா
ADDED : டிச 29, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: வேடசந்தூர் குன்னம்பட்டியில், ஒக்கலிகர் இன மக்களின் குலதெய்வ கோயிலான வீருதிம்மம்மன் கோயில் உள்ளது. இங்கு நடைபெற்ற குடும்ப விழாவில், அந்த சமுதாயத்தை சேர்ந்த திறமையான பேச்சு, படிப்பு, கதை, கட்டுரை, நடனம், நாட்டியம், சிலம்பாட்டம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கல்வி பயிலும் 18 மாணவர்களுக்கு இளைஞர் பேரவையின் சார்பில் தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னம்பட்டி பழனிச்சாமி பங்கேற்றனர்.

