/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாவரவியல் பூங்கா போல வீட்டை மாற்றிய குடும்பம்
/
தாவரவியல் பூங்கா போல வீட்டை மாற்றிய குடும்பம்
ADDED : செப் 29, 2025 06:09 AM

வ டமதுரை அருகே பாடியூர் பி.புதுப்பட்டியில் வசிக்கும் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் குடும்பத்தினர் தங்களது வீட்டில் 50க்கும் மேற்பட்ட தாவர இனங்களை வளர்த்து மினி தாவிரவியல் பூங்கா போல பராமரிக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனும் பணி காலம் முடிந்து ஓய்வு காலத்தில் உறவுகளுக்கு அடுத்தப்படியாக தங்கள் மனசு இளைப்பாறுவது இயற்கையோடு தான். அதுவும் தான் நட்டு வளர்த்த மரக்கன்று மரமாகி பலன் தருவதும், செடிகளில் பூக்கள் மலர்வதை காணும் போது மனது மகிழ்ச்சியின் உச்சத்தில் லயித்து நிற்கும்.
அந்த வகையில் வடமதுரை ஒன்றியம் பாடியூர் பி.புதுப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் திருவேங்கடம், அவரது குடும்பத்தினரும் தங்களது வீட்டில் 50 க்கும் மேற்பட்ட தாவர இனங்களை வளர்த்து பசுமை வீடாக பராமரிக்கின்றனர்.
சுற்றுச்சுவர் கட்டமைப்பு கொண்ட இவரது வீட்டில் மர வகைகளில் முந்திரி, நெல்லி, பாதம், மா, சப்போட்டா, பப்பாளி, வாழை, வாட்டர் ஆப்பிள், மனோரஞ்சிதம், முருங்கை, மருதானி, கூபாபுல், பாக்கு, ஆலம், கருவேப்பிலை என பலவும், செடி,கொடி வகைகளில் வெள்ளை எருக்களை, சுண்டைக்காய், மருகு, துாதுவளை, மணிபிளாண்ட், நித்திய கல்யாணி, மல்லிகை, கல்செடி, கன்னியாகுமரி காத்தாளை, தொட்டாசிணுங்கி, பிரண்டை, கொற்றன் மஞ்சள், சதுர கள்ளி, மயில்மாணிக்கம், டேபிள் ரோஸ், மற்றும் பல கீரை வகைகள் என 50க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் பாதுகாத்து வளர்க்கப்படுகிறது.