ADDED : நவ 25, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,:1970ல் நடிகர் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, பத்மினி, முத்துராமன் நடிப்பில் 'ராமன் எத்தனை ராமனடி' படம் வெளியானது.
இந்த படம் 55 ஆண்டுகளுக்கு பின் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது. திண்டுக்கல் நத்தம் சாலை தனியார் திரையரங்கில் நேற்று திரையிடப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பில் சிவாஜி கணேசன் படத்திற்கு முறுக்கு, அதிரசம் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். ரசிகர்கள் 200 பேருக்கு பிரியாணி,திரையரங்க ஊழியர்களுக்கு வேட்டி, சட்டை வழங்கினர்.

