ADDED : பிப் 07, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மகாத்மா காந்தி கிராமப்புற ஊரக வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ஊதியம் ரூ.600 ஆக உயர்த்த வேண்டும்.
ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிப்.10ல் தர்ணா போராட்டம் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஏராளமானோர் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டனர்.
இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பகத்சிங், தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பங்கேற்றனர்.

