/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னரெட்டியபட்டி ரோட்டிற்கு விடிவு
/
சின்னரெட்டியபட்டி ரோட்டிற்கு விடிவு
ADDED : ஜன 08, 2024 05:16 AM
வடமதுரை : தினமலர் செய்தி எதிரொலியால் இரு ஒன்றியங்களை இணைக்கும் ரோடுகள் பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்த நிலையில் வடமதுரை ஒன்றிய பகுதிக்குள்ளான ரோடு பகுதியில் சீரமைப்பு பணி நடக்கிறது.
வடமதுரை ஒன்றியம் சிங்காரக்கோட்டை ஊராட்சி சின்னரெட்டியபட்டியிலிருந்து சங்கிலிதேவனுார் வழியே சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி ஊராட்சி அக்கரைப்பட்டிக்கு 2.5 கி.மீ., துார ரோடு உள்ளது. இரு ஒன்றியங்களின் கடைசி பகுதியில் இருப்பதால் இந்த ரோட்டை புதுப்பிப்பதில் அதிகாரிகளிடம் அக்கறை இல்லாமல் இருந்தது.
சில பாலங்களும் பழுதடைந்து கிடந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக வடமதுரை ஒன்றிய பகுதிக்குள் சிங்காரகோட்டை ஊராட்சி எல்லைக்குள்ளாக இருக்கும் 600 மீட்டர் துார ரோடு சீரமைப்புடன் பழுதான 3 பாலங்களும் புதுப்பிக்கும் பணி மும்முரமாகநடக்கிறது.
அப்பகுதியினரின் சிரமத்தை செய்தியாக வெளியிட்டு பிரச்னை தீர உதவிய தினமலர் நாளிதழுக்குமக்கள் நன்றி தெரிவித்தனர்.