ADDED : செப் 22, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
அம்பிளிக்கை, செப்.23-
பெரியகோட்டை மடத்து தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர் 46. இவர் செப்.,16ல் தனது தோட்டத்தில் தக்காளி அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்ததால் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் நேற்று இறந்தார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
