ADDED : செப் 22, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், செப்.23
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாலிபரை அடித்து கொலை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்தவர் ஜெயக்குமார் 38. இதே பகுதியை சேர்ந்த பிரேம்நாத் மனைவி சித்ராவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். பலமுறை கண்டித்தும் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட ஜெயக்குமாரை சித்ராவின் கணவர் பிரேம்நாத் 40, தம்பி கார்த்தி 35, உறவினர்கள் கார்த்திகேயன் 35, தேவா 30, விஜயகுமார் 28, சுபாஷ் 30, கண்ணன் 40, ஆகியோர் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ஜெயக்குமார் இறந்தார். கொடைக்கானல் போலீசார் கொலை வழக்கு பதிந்து பிரேம்நாத் உட்பட 7 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
