/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கரடி தாக்கி விவசாயி காயம்; உயிரை காத்த வளர்ப்பு நாய்
/
கரடி தாக்கி விவசாயி காயம்; உயிரை காத்த வளர்ப்பு நாய்
கரடி தாக்கி விவசாயி காயம்; உயிரை காத்த வளர்ப்பு நாய்
கரடி தாக்கி விவசாயி காயம்; உயிரை காத்த வளர்ப்பு நாய்
UPDATED : டிச 08, 2025 07:55 AM
ADDED : டிச 08, 2025 05:22 AM

வத்தலக்குண்டு: திண்டுக்கல்மாவட்டம் விராலிப்பட்டியில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த விவசாயியை கரடி தாக்கியதில் காயமடைந்தார். அவர் வளர்ப்பு நாயால் உயிர் தப்பினார்.
விராலிபட்டியைச் சேர்ந்தவர் சேகர் 60. தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார். நேற்று முன்தினம் நடவு செய்யப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு, நேற்று காலை தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது 3 அடி உயரமுள்ள கரடி அவரது தொடையை கவ்வி பிடித்து கீழே தள்ளியது. அந்த நேரத்தில் அவரது வளர்ப்பு நாய் குறைத்து கரடியுடன் சண்டையிட்டு துரத்தியதால் நாயும் காயமடைந்தது. காயமடைந்த சேகர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
அவர் கூறுகையில்'' கடந்த 6 மாதங்களாகவே கரடி நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கூறியும் நடவடிக்கை இல்லை. எனது நாய் இல்லை என்றால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

