ADDED : டிச 08, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அகில இந்திய சர்க்கரை நோய் ஆராய்ச்சி கழகம் தமிழக கிளை சார்பில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, கால் பாத நரம்பு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வக்கம்பட்டி மதலை மரியம்மன் தேவாலய வளாகத்தில் நடந்தது.
இந்திய சர்க்கரை நோய் ஆராய்ச்சி கழக தேசியத்தலைவர் விஜய் விஸ்வநாதன் தலைமை வகித்தார். டாக்டர்கள் அனுஜ் மகேஸ்வரி, அமித் குப்தா, விஜயகுமார், பவதாரணி, சண்முகம், பரணி, முரளிதரன் கலந்து கொண்டனர்.

