ADDED : அக் 14, 2024 09:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீரனுார் : பழநி கீரனுார் பாறைப்பட்டியில் நிலப்பிரச்னையில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழநி கீரனுார் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி செந்தமிழன் 50. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் துரைசாமி 65.
இருவருக்கும் இடையே பூர்வீக நிலப்பிரச்சினை இருந்தது. துரைசாமி, அவரது மனைவி வெள்ளத்தாய் 60, அவரது குடும்பத்தினர், பிரச்சனைக்குரிய நிலத்தில் பயிரிட முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் துரைசாமி குடும்பத்தினர் செந்தமிழனை கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
கீரனுார் போலீசார் இதுதொடர்பாக துரைசாமி 65, வெள்ளத்தாய் 60, மானுாரைச் சேர்ந்த செல்வராஜ் 37, செல்வி33, தனலட்சுமி40, குமாரத்தாள் 42, தங்கதுரை 47 ஆகிய 7பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.