/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அவதுாறாக பேசிய விவசாயி கொலை: மூவர் கைது
/
அவதுாறாக பேசிய விவசாயி கொலை: மூவர் கைது
ADDED : டிச 15, 2024 12:56 AM

நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பாப்பம்பட்டியில் பெண்ணை அவதுாறாக பேசிய விவசாயி மாரியப்பன் 70, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது மகள் பார்வதி 45, படுகாயமுற்றார்.
பாப்பம்பட்டி வடக்குத்தெரு மாரியப்பன். அவரது மகள் பார்வதி. இவர்கள் வீடு அருகே சக்திவேல் மனைவி சின் னப்பொண்ணு 50, மகன் மகேந்திரன், அவரது மனைவி சுதா 28, மற்றொரு மகன் மாசிலாமணி 28, வசிக்கின்றனர்.
நேற்று காலை கடைக்கு சென்ற சின்னப்பொண்ணுவை மாரியப்பன் அவதுாறாக பேசியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் மாசிலாமணி கத்தியால் மாரியப்பன், பார்வதியை குத்தினார். இதில் மாரியப்பன் இறந்தார். பார்வதி காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மாசிலாமணி, சின்னப் பொண்ணு, சுதாவை போலீசார் கைது செய்தனர்.