/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதிய அளவில் மழை பெய்யாததால் விவசாயிகள் பாதிப்பு மாவட்டத்தில் கிணறுகளில் நீர்மட்டம் குறையும் அபாயம்

ADDED : பிப் 16, 2026 05:39 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில்பல பகுதிகளில் மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நீராதாரங்களான கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் (போர்வெல்) தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டது. இதனால் வேளாண்தொழில் பாதிக்கப்படுவதுடன் விவசாயிகள் தாங்கள் வளர்த்துவரும்கால்நடைகளை காப்பாற்ற முடியவில்லையே என கவலை அடைந்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் கால்நடைதீவன மேம்பாட்டிற்கான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இம்மாவட்டத்தில் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது. காய்கறி வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றன. பருவ மழை காலத்தில் பெய்யும் மழையால் நிரம்பும் நீர்நிலைகளைக் கொண்டு வேளாண் தொழில் நடக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. பல நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் எட்டிக் கூட பார்க்கவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்ப வில்லை. குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நீர் நிரம்பியுள்ள நீர்நிலைகளும் வற்றி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
இதனால் சுற்றியுள்ள கிணறுகள் 'போர்வெல்'களில் நீர்மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வேளாண் தொழில் செய்வதில் சிரமம் ஏற்படும் என, விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் இந்த அபாய நிலையை எதிர்கொள்ளும் விவசாயிகள், தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கான குடிநீராகவும், தென்னை மரங்களுக்கு பாய்ச்சுவதற்கு போதிய நீர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.