/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குளத்தை துார்வார ரூ.30 லட்சம் கணக்கு; ரூ.30 ஆயிரத்திற்கு கூட வேலை நடக்கல விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
குளத்தை துார்வார ரூ.30 லட்சம் கணக்கு; ரூ.30 ஆயிரத்திற்கு கூட வேலை நடக்கல விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
குளத்தை துார்வார ரூ.30 லட்சம் கணக்கு; ரூ.30 ஆயிரத்திற்கு கூட வேலை நடக்கல விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
குளத்தை துார்வார ரூ.30 லட்சம் கணக்கு; ரூ.30 ஆயிரத்திற்கு கூட வேலை நடக்கல விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 26, 2025 03:55 AM

திண்டுக்கல்: ''ரெட்டியார்சத்திரம் குட்டப்பட்டி அருகே உள்ள தாதன்குளத்தை துார்வார ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சத்திற்கு பணிகள் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் ரூ.30 ஆயிரத்திற்கு கூட எந்த வேலையும் நடக்கவில்லை'' விவசாயி குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாகேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் பாணடியன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் காயத்ரி பங்கேற்றனர். விவசாயிகளின் வேண்டுகோளின்படி பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விவசாயிகள் விவாதம்:
நாகராஜன்(அக்கரைப்பட்டி) : ரெட்டியார்சத்திரம், குட்டப்பட்டி அருகே உள்ள தாதன்குளத்தை துார்வார ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சத்திற்கு பணிகள் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் ரூ.30 ஆயிரத்திற்கு கூட எந்த வேலையும் நடக்கவில்லை.
கலெக்டர் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புஷ்பா ( பழநி) : கோட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் பழநியில் 2 மாதங்களுக்கு மேலாக நடத்தவில்லை.
கலெக்டர் : கொடைக்கானலில் நடப்பது போல் கோட்ட அளவிலாக விவசாயிகள் கூட்டம் நடத்தப்படும்
நல்லுச்சாமி(ஒட்டன்சத்திரம்) : பால்கறவை இயந்திரத்திற்கு மானியம் வழங்கப்படுமா, தர்பூசணி குறித்த வதந்தியால் விவசயிகள் தவிக்கிறோம்.
கலெக்டர் : தர்பூசணி வதந்திகளை நம்ப வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கிறோம்.
விஜயலட்சுமி(அழகுபட்டி) : 13 ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்துகிறோம். பண்ணைக்கு அருகே மாடுகள் இறந்ததால் பண்ணை தான் காரணம் என கூறி மூடி விட்டனர். ஆய்வில் மாடு இறப்பிற்கு கோழிப்பண்ணைக்கும் சம்மந்தமில்லை என வந்துள்ளது. 2 ஆண்டுகளாக திறக்க முடியாமல் வயதான காலத்தில் தவிக்கிறோம்.
கலெக்டர் : மனுவாக அளியுங்கள் உரிய விசாரணை நடத்தப்படும்.
செல்வம்(வத்தலகுண்டு) : மஞ்சளாறு அணையை சரியாக பயன்படுத்தினால் நிலக்கோட்டை மட்டுமல்ல திண்டுக்கல் மாவட்டத்திற்கே குடிநீர் பஞ்சம் வராது.
பிச்சமுத்து(நாகையன்கோட்டை) : காட்டுமாடு ஏற்படுத்திய சேதத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமாகிவிட்டன. ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாரிமுத்து(கணவாய்பட்டி) : விவசாயிகளுக்கான அடையாள அட்டைக்கு பதிவு செய்ய சொல்கின்றனர். அதன்மூலமாக என்ன நன்மை கிடைக்கும்
நாகேந்திரன் (நேர்முக உதவியாளர்) : விவசாயிகளுக்கு தற்போது பதிவு செய்து வழங்கப்பட்டு வரும் தனி குறியீட்டு என் வழியே திட்டங்கள், மானியங்கள் உள்ளட்டவை வழங்கப்படும். பதியாத விவசாயிகள் பதிந்து கொள்ள வேண்டும்.
தனுஷ்கோடி(ஆலம்பாடி) : தனியார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது.
ராமசாமி(ஆலம்பாடி ): கால்நடைகள் அதிகமுள்ள பகுதிகளில் கால்நடை மருத்துமனைகள் வேண்டும்.
நேர்முக உதவியாளர் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமசந்திரன்(சாணார்பட்டி ): தற்போது வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை வெயில் காலம் கருதி ஒரு மணி நேரம் அதிகம் வழங்கிட வேண்டும்.
நேர்முக உதவியாளர் : மின்வாரிய அலுவலர்கள் அதற்கான வாய்ப்புகள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்ராஜ்( கலிக்கநாயக்கன்பட்டி ) : பழநி வரதமாநதி நீரை தான் உபரிநீராக பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கே பற்றாக்குறை உள்ளது. இதில் நல்லதங்காள் ஓடையுடன் இணைக்கும் திட்டம் வருவது பாதிப்பை ஏற்படுத்தும். அதனை கைவிட வேண்டும்.
கலெக்டர் : கடிதமாக விவரத்துடன் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காந்திமதி(ஆர்.கோம்பை): போலி பட்டாக்கள் தயார் செய்து இடங்களை ஆக்கிரமிப்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது.
கலெக்டர் : தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.