sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அதிருப்தியில் விவசாயிகள்: மலையடிவார கிராமங்களில் யானைகள், காட்டுமாடு நடமாட்டம்:விவசாய பயிர், உயிர்பலி கட்டுப்படுத்தலில் வனத்துறை அலட்சியம்

/

அதிருப்தியில் விவசாயிகள்: மலையடிவார கிராமங்களில் யானைகள், காட்டுமாடு நடமாட்டம்:விவசாய பயிர், உயிர்பலி கட்டுப்படுத்தலில் வனத்துறை அலட்சியம்

அதிருப்தியில் விவசாயிகள்: மலையடிவார கிராமங்களில் யானைகள், காட்டுமாடு நடமாட்டம்:விவசாய பயிர், உயிர்பலி கட்டுப்படுத்தலில் வனத்துறை அலட்சியம்

அதிருப்தியில் விவசாயிகள்: மலையடிவார கிராமங்களில் யானைகள், காட்டுமாடு நடமாட்டம்:விவசாய பயிர், உயிர்பலி கட்டுப்படுத்தலில் வனத்துறை அலட்சியம்

1


ADDED : ஜன 02, 2025 05:41 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:41 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இவை பருவகாலம், சாகுபடி சீசனுக்கு ஏற்ப தங்களின் வழித்தடங்கள், வாழிடங்களை மாற்றி முகாமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

மலைப்பகுதி, அடிவார கிராமங்களில் தென்னை, வாழை, சவ்சவ், காபி, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட சாகுபடி நடக்கிறது. இதனிடையே அடிவார கிராமங்களிலும் வன உயிரினங்களின் நடமாட்டம் சில ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்துள்ளது.

யானைகள், காட்டு பன்றிகளால் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. சோலார் மின் வேலி போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் பெயரளவில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

யானைகளால் பயிர்கள் , வீடுகளை சேதப்படுத்தல், விவசாயிகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. சில ஆண்டுகளாக கன்னிவாடி வனச்சரக பகுதியில் வன ஊழியர் உட்பட பலர் உயிர்பலி என இவை ஆண்டுதோறும் தொடர்கிறது. யானை நடமாட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் வழக்கம் போல் வனத்துறையின் தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே மேற் கொள்ளப்படுகிறது.

யானைகளின் நிரந்தர வழித்தட பகுதியை கண்காணித்து அவற்றை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் திட்டமிடலை வனத்துறை கண்டுகொள்ளவில்லை. பட்டாசு வெடிப்பது, புகைமூட்டம் எழுப்புதல் போன்ற நடவடிக்கைகள் ஆவணப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன. யானைகளை கட்டுப்படுத்துவதில் பலனளிப்பதாக இல்லை.சில வாரங்களாக மீண்டும் மலையடிவார கிராமங்களில் யானைகள், காட்டுப்பன்றி நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

பயிர் சேதம் தொடர்ந்த போதும் வனத்துறையினர் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இப்பிரச்னையில் நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை பெயரளவில் மட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவைக்கேற்ப அடுத்தடுத்து புகை மூட்ட, யானை விரட்டும் பணிகளை மேற்கொள்வதில்லை. யானை கண்காணிப்பு பணியில் கடும் தொய்வு நிலவுகிறது. மலைடிவாரத்தில் 20 கி.மீ., சுற்றளவு கிராம விளைநிலத்தில் காட்டுப்பன்றிகள் முகாமிட்டு சேதப்படுத்துகின்றன. தொங்கும் சோலார் மின்வேலி திட்டம், செயல்படுத்தவில்லை. பாதித்த குடியிருப்பு, சாகுபடி, உயிர் பலிகளுக்கு நிவாரணம் வழங்குவதால் நிரந்தர தீர்வாக இருக்காது. வழக்கமான வழித்தடம் குறித்த முறையான திட்டமிடலுடன் சிறப்பு குழுவினர் கண்காணிக்க வேண்டும். தண்ணீர், உணவு தேவைகளுக்கான கட்டமைப்புகளை வனப்பகுதிக்குள் உருவாக்க வேண்டும்.

- கே.கணபதி, பா.ஜ., பிற மொழி பிரிவு ஒன்றிய தலைவர், புதுஎட்டமநாயக்கன்பட்டி.

தேவை நிரந்தர தீர்வு








      Dinamalar
      Follow us