/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எள் உற்பத்தி செய்தும் விலையில்லாததால் விவசாயிகள் பாதிப்பு: அரசு கொள்முதல் செய்ய தேவை நடவடிக்கை

ADDED : டிச 23, 2024 05:34 AM

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டத்தில் எள் உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் வேதனை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் மழை காலத்தில் மட்டுமே, பருவ மழையை நம்பி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், நிலக்கடலை எள்ளு உள்ளிட்ட பயிர் வகைகளை, மானாவாரி விவசாயமாக விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
எள்ளு பயிர் பயிரிடும் விவசாயிகள் 75 நாட்களுக்குள் விதைப்பு செய்து களையெடுப்பு,உரம் இடுதல் உள்ளிட்ட பணிகளை செய்து அறுவடை செய்து காயவைத்து அடித்து உதிர்த்து மூடையாக்கி எள்ளு மூடைகளை தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இவ்வளவு சிரமங்களுடன் பயிரிடப்படும் எள்ளு பயிர் இதயத்துக்கு வலிமை சேர்க்கும் நல்லெண்ணெய் தயாரிக்க பயன்படும் என்பதால் விவசாயிகள் கூடுதல் ஆர்வத்துடன் பயிரிடுகின்றனர்.
கடந்த ஆண்டு 75 கிலோ எடை கொண்ட ஒரு மூடை எள்ளு, ரூ.12 ஆயிரத்துக்கு விலை போனது.
ஆனால் தற்போது இதே மூடை ரூ.9 ஆயிரத்துக்கு மட்டுமே விலை போகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மானாவாரி விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிடக்கூடிய எள்ளு,கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு நிர்ணய விலை கிடையாது. இதனால் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்கும் நிலை உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.