/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வானிலை நிலவரம் அறிய முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு; தானியங்கி ஆய்வு மையங்களுக்கு புத்துயிர் தேவை

ADDED : ஆக 28, 2025 04:30 AM

-நவீன காலத்திற்கேற்ப விவசாயத்துறையிலும் அறிவியல் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதன் ஒருபகுதியாக வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலத்தில் 224 ஒன்றியங்களில் தலா ரூ.6 லட்சம் மதிப்பிலான தானியங்கி வானிலை ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு மையமும் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டு அந்தந்த பகுதி மழை விபரம், குறைந்த, அதிக பட்ச வெப்ப நிலை, சூரிய வெப்ப கதிர் வீச்சு, காற்றின் அழுத்தம், மண்ணின் ஈரத்தன்மை, வெப்ப நிலை, முன்னெச்சரிக்கை வானிலை நிலவரம் என 10 வகை விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் மணிக்கு ஒருமுறை www.tawn.tnau.ac.in.
-என்ற தமிழ்நாடு வேளாண் வானிலை வலையிணைப்பு என்ற பெயரிலான இணைய தளத்தில் மாவட்டம்,வட்டாரம் வாரியாக தமிழ், ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது.
இந்த விபரங்களை கொண்டு எப்போது விதைப்பது, கதிர் வாங்கும் நேரங்களில் பாதிப்பு ஏற்படுதல் போன்றவற்றை தவிர்க்க விவசாயிகள் திட்டமிடலாம். முன்கூட்டியே இடுபொருட்களை வாங்கி இருப்பு வைக்கும் நடவடிக்கைகளையும் செய்யலாம்.
மற்ற துறைகளை போல உழவு தொழிலிலும் இணையதளத்தை பயன்படுத்தி முன்னேற்றம் அடையும் வாய்ப்பாக இருந்து வந்தது. ஆனால் இந்த தானியங்கி வானிலை ஆய்வு மையங்களில் உபகரணங்கள் திருட்டு, காலமுறை பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் குஜிலியம்பாறை, பழநி பகுதியில் நிறுவப்பட்ட தானியங்கி ஆய்வு மையங்களின் மூலமாக தகவல் மட்டும் கிடைக்கிறது.
மற்ற பகுதிகளின் தகவல் கிடைக்காததால் விவசாயிகளுக்கு ஏமாற்றமாக உள்ளது. பழுதான, செயலிழந்த தானியங்கி ஆய்வு மையங்களுக்கு புத்துயிர் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.